Bihar Election | Nitishkumar | NDA | Prasanth Kishore | குண்டை தூக்கிப் போட்ட பிரசாந்த் கிஷோர்

x

பீகார் மாநிலத்தில் உலக வங்கி கொடுத்த 14 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை, பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு நிதீஷ் குமார் அரசு தவறாக பயன்படுத்தியதாக, ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார்.

பீகாரில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு, மகளிர் வேலைவாய்ப்பு நிதி என்ற பெயரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயை நிதீஷ் குமார் அரசு அளித்தது. இந்நிலையில், வளர்ச்சித் திட்டங்களுக்காக, உலக வங்கி அளித்த நிதியை, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நிதீஷ் குமார் அரசு தவறாக பயன்படுத்தி உள்ளதாக பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்