

பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள ராஜ் மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பீகாரில் காட்டாட்சியை கொண்டு வந்தவர்களை மீண்டும் தோற்கடிக்க மக்கள் தயாராகி உள்ளதாக தெரிவித்தார். இவர்கள் தான் பீகாரை சூறையாடியவர்கள் என்றும், அவர்களின் ஆட்சியில் தான் பீகாரில் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெற்றதாகவும் பிரதமர் நரேந்திர மோடி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சாடியுள்ளார்.