BJP | West Bengal | மேற்கு வங்க பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சி - கற்கள், பாட்டில்கள் பறக்க தாக்குதல்
BJP | West Bengal | மேற்கு வங்க பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சி - கற்கள், பாட்டில்கள் பறக்க தாக்குதல்
மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்
மேற்கு வங்கத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு வாகனத்தின் மீது சிலர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக எம்எல்ஏக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக, கூச் பெஹரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்றபோது, திடீரென சிலர் கற்கள் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், சுவேந்து அதிகாரியின் பாதுகாப்புக்காக சென்ற காரின் கண்ணாடி உடைந்தது.
தாக்குதலை நடத்தியது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர், ரோஹிங்கியா மற்றும் வங்கதேச முஸ்லீம்கள் என்று சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். அதே நேரத்தில், அரசியல் டிராமாவை திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
