``இந்துத்துவா அரசியலை அழிக்கும் என்பதால் பாஜக இதை செய்யாது’’ ராகுல்காந்தி

x

பாஜக அரசால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது - ராகுல் காந்தி

பாஜக அரசு, சாதிவாரி கணகெடுப்பை சரியான முறையில் செய்ய போவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.. சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சமூக, பொருளாதார கருவி என்று கூறிய ராகுல் காந்தி, இது அரசியல் கருவியும் என்பதால் பாஜகவுக்கு பிடிக்கவில்லை என கூறினார். மேலும், இது இடஒதுக்கீடு மீதான 50 சதவீத சுவரை உடைக்கும் யோசனை என்று தெரிவித்தார். இதன் மூலம் கல்வி மற்றும் அரசு பதவிகளில் சரியான இடஒதுக்கீடு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு இந்துத்துவா அரசியலை அழிக்கும் திறன் கொண்டது என்பதால், பாஜக அரசால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்