கருப்பு பணம், ஊழல் ஒழிப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை மூலம் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி

கருப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கைகள் மூலம், அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கருப்பு பணம், ஊழல் ஒழிப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை மூலம் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி
Published on

16 வது மக்களவை கூட்டத்தில் நிறைவுரை ஆற்றிய பிரதமர் மோடி, கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு பெரும்பான்மையான ஆதரவுடன், பாஜக ஆட்சியமைத்துள்ளது என பெருமிதத்துடன் கூறினார். இதனால், நாடும் நாட்டு மக்களும் தன்னம்பிக்கையுடன் உள்ளதாகவும் இது நாட்டின் வளர்ச்சிக்கு சிறப்பான அறிகுறி எனவும் மோடி குறிப்பிட்டார். 16 வது மக்களவையில் தான், 44 பெண்கள் உறுப்பினர்களாக தேர்வானதாகவும், அனைவரும் சிறப்பான பணியாற்றியதாகவும் கூறிய பிரதமர் மோடி அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். 5 ஆண்டு கால ஆட்சியில், ஆயிரத்து 400 க்கும் அதிகமான மசோதாக்கள், நிறைவேற்றப்பட்டதாகவும், இப்பணிகள் மேலும் தொடர வேண்டும் என விரும்புவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com