ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கு.. வெளியான முக்கிய தகவல்

x

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2022ல் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுக பிரமுகரை தாக்கி அரை நிர்வாணமாக்கியதாக ஜெயக்குமார் உட்பட 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை ரத்து செய்ய கோரி ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறை ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறி, வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்