"உயரிய தலைவரை நாடு இழந்துவிட்டது" - ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்

வாஜ்பாய் மறைந்த செய்திக் கேட்டு ஆழ்ந்த துக்கம் அடைந்ததாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
"உயரிய தலைவரை நாடு இழந்துவிட்டது" - ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்
Published on

யோகி ஆதித்யநாத் உ. பி முதல்வர்

வாஜ்பாய் மறைவு உத்தரபிரதேச மக்களை வேதனையி​ல் ஆழ்த்தியுள்ளது.

பாஜக மட்டுமல்ல, இந்திய அரசியலில் பெரும்பங்காற்றியுள்ளார் வாஜ்பாய். அவரது சாதனை போற்றும் அதே வேளையில் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்.

"வாஜ்பாய் இழப்பு நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு" - சிவராஜ் சிங் சவுகான்

அடல் பிஹாரி வாஜ்பாய் மறைந்துவிட்டதை கனவில் கூட ஏற்க முடியவில்லை என்றும், நாட்டு மக்களால் அன்பு செய்யப்பட்டவர் வாஜ்பாய் என்றும் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு மிகப்பெரிய தலைவர் என்றும், அவரை சுற்றி இருந்த போது பலவற்றை கற்றுக் கொண்டதாகவும் சவுகான் தெரிவித்துள்ளார். அவர் இல்லாத அரசியலை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்றும், மிகச்சிறந்த இந்தியப் பிரதமர் வாஜ்பாய் என்றும், அவரது இழப்பு நாட்டுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com