ஆசிய விளையாட்டு போட்டிகள்.. "20% பதக்கங்களை தமிழக வீரர்கள் வென்றது பெருமை" - உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தொழில் நிறுவனங்களின் கூட்டுறவு கருத்தரங்கம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அரசு துறை அலுவலர்கள், 80க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் வீரர்கள் வீராங்கனைகளுக்கு தேவையான உதவிகளை பொதுமக்களும் வழங்கிடும் வகையில் புதிய QR-codeஐ அமைச்சர் உதயநிதி அறிமுகம் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், ஆசிய போட்டிகளில் இந்தியா வென்ற மொத்த பதக்கங்களில் தமிழ்நாடு வீரர்கள் 20 சதவீத பங்களிப்பை அளித்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com