TVK | Dharapuram| நாள் நெருங்க நெருங்க தாராபுரத்தை சூறாவளியாக சுற்றிவரும் தவெக பெரும்புள்ளிகள்

நாள் நெருங்க நெருங்க தாராபுரத்தை சூறாவளியாக சுற்றிவரும் தவெக பெரும்புள்ளிகள்

தாராபுரம் இடைத்தேர்தல் - தவெகவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில், தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் வடக்கு ஒன்றியம் நல்லாம்பாளையம் ஊராட்சி, புளியவலசு மற்றும் பழனிகவுண்டன்வலசு பகுதிகளில், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த், அமைச்சர் சம்பத் ஆகியோர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். திறந்த வாகனத்தில் பிரசாரம் செய்த சுனில் ஆனந்த், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை எடுத்துரைத்து, சத்தியபாமாவுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். கடந்த மூன்று மாத ஆட்சியில் சட்ட ஒழுங்கு, ஊழல் அற்ற நிர்வாகம் என சிறப்பாக செயல்படுவதாக கூறிய அவர், மக்களின் தேவைகளை புரிந்து செயல்படும் அரசாக தவெக ஆட்சி இருப்பதாக கூறினார். தொடர்ந்து அமைச்சர் சம்பத், பெண்களுக்கான வெற்றிப் பயணம் கட்டணமில்லா பேருந்து திட்டம் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com