"பாஜகவின் திட்டம் நிறைவேறவில்லை" வெளியே வந்ததும் மோடியை உரசும் கெஜ்ரிவால் | Arvind Kejriwal

x

மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் இடைக்கால ஜாமின் பெற்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது இல்லத்தில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஆட்சியைக் கவிழ்க்க பாஜக நினைத்ததாகவும் ஆனால் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை பாஜகவினால் அசைக்க முடியவில்லை என்றும் கூறினார். தான் கைது செய்யப்பட்ட பிறகு கட்சி மேலும் வலுப்பெற்றது எனப் பேசிய கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியால் மட்டுமே இந்தியாவுக்கு ஒளிமயமான நல்ல எதிர்காலத்தை கொடுக்க முடியும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்