Arunraj IRS Joins TVK | தவெக கொ.ப. பொதுச்செயலாளரான பின் அருண்ராஜ் கொடுத்த முதல் பேட்டி
மக்களின் அதிகாரம் பெறுவதற்காகவே அரசியலுக்கு வந்ததாக, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளராக அருண்ராஜ் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயகத்தில் உண்மையான அதிகாரம் மக்களிடத்தில் தான் உள்ளது என்றார். அதிகாரியாக இருந்தபோது அரசியல் தலையீடு இருந்ததா என்ற கேள்விக்கு, வருமானவரித்துறையில் பணியாற்றிய போது சில சமயங்களில் எனக்கூறி பதில் கூறாமல் தவிர்த்தார்.
https://youtu.be/Po3AGNc4N7I
Next Story