அருண் ஜெட்லி இறுதிச் சடங்கு - தலைவர்கள் அஞ்சலி : மாநில அரசின் முழு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல், அரசு மரியாதையுடன் டெல்லியில் எரியூட்டப்பட்டது.
அருண் ஜெட்லி இறுதிச் சடங்கு - தலைவர்கள் அஞ்சலி : மாநில அரசின் முழு மரியாதையுடன் இறுதிச் சடங்கு
Published on
உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமான அருண் ஜெட்லியின் உடல், முதலில் அவரது வீட்டிலும் பின்னர், பாஜக தலைமை அலுவலகத்திலும் வைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், அவரது உடல் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குக்காக எடுத்துச் செல்லப்பட்டது. யமுனை நதிக் கரையில் உள்ள நிகம்போத் காட் பகுதியில், அவரது உடலுக்கு குடும்ப வழக்கப்படி சடங்குகள் நடைபெற்றன. பின்னர், அவரது மகன் ரோஹன் ஜெட்லி தீ மூட்டினார். டெல்லி அரசின் முழு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
X

Thanthi TV
www.thanthitv.com