``இனி குடும்பத்த கவனி’’ - ஆம்ஸ்ட்ராங் மனைவி பவரை பறித்த மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதியின் உத்தரவு படி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியான பொற்கொடி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தை கவனித்துக் கொள்வார் எனவும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதில் கவனம் செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இனிமேல் பொற்கொடி கட்சி பணிகளில் ஈடுபடமாட்டார் எனவும் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர்களின் திறமைக்கேற்ப அவர்கள் கட்சிப் பணியைத் தொடர்வார்கள் எனவும் BSP கட்சி ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்துடன் கடைசி வரை உறுதியாக நிற்கும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கப்பட்ட நிலையில், மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள் செயல்பட வேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.