அரசு மருத்துவமனையில் மருத்துவர், கவுன்சிலர் இடையே வாக்குவாதம்

x

தென்காசி அரசு மருத்துவமனையில் திமுக மாவட்ட கவுன்சிலர் மற்றும் மருத்துவரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ காட்சி பரவி வருகிறது. தென்காசி மாவட்டம் அச்சம்பதூர் பகுதியை சேர்ந்த மைமுன் என்ற பெண்ணுக்கு, இரவில் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த போது, மருத்துவர் தாமதமாக வந்ததாகவும், சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, மாவட்ட கவுன்சிலர் கனிமொழி மற்றும் மருத்துவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்