``என்னை கவுன்சிலராக வர சொல்கிறீர்களா?'' - வைகோ கிண்டல்

x

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கு இருக்கையில் அமரச் சொன்ன மதிமுக நிர்வாகிகளிடம், தன்னை கவுன்சிலராக வர சொல்கிறீர்களா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டு சிரித்தது இணையத்தில் கவனம் பெற்றது. நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரான சர்.பிட்டி தியாகராஜர் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அவரின் திருவுருவப் படத்திற்கு வைகோ மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாமன்ற கூட்ட அரங்கை பார்வையிட்ட அவரை, மதிமுக கவுன்சிலர்கள் இருக்கையில் அமர அழைத்து சென்றனர். அப்போது என்னை கவுன்சிலராக்க பார்க்கிறீர்களா என அவர் கிண்டலாக கேட்டார்.


Next Story

மேலும் செய்திகள்