"பாஜக வரலாறு படைக்கும்.." - நம்பிக்கையுடன் சொன்ன மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

திருவள்ளூர் தொகுதி பாஜக வேட்பாளர் பாலகணபதியை ஆதரித்து பிறமொழி வாக்காளர்களிடம் ஆதரவு கோரும் சந்திப்பு பட்டாபிராமில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்தும் பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டும் வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் பாஜகவிற்கு மக்கள் ஆதரவு பெருகி உள்ளது என்றும், தமிழக மக்கள் மோடியுடன் நிற்கின்றனர் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில், பெருவாரியான வாக்குகளை பெற்று பாஜக வரலாறு படைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com