"தமிழ்நாட்டில் எங்களுக்கு இவ்வளவு ஆதரவு இருக்கு.."ஆதாரத்தோடு ட்விட் போட்ட அண்ணாமலை
பாஜகவின், "சமக்கல்வி எங்கள் உரிமை" கையெழுத்து இயக்கத்திற்கு இணையதளம் வழியாக 3 நாட்களில் 3 லட்சம் பேர் கையெழுத்திட்டிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ள அவர், தமிழக அரசுப் பள்ளிகளிலும் மூன்று மொழிகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்ற தங்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுவதற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
