Annamalai | TTV Dinakaran | அண்ணாமலை, TTV எதிர்பாரா சந்திப்பு - அங்கு நடந்த இன்னொரு ட்விஸ்ட்
திருமண விழாவில் சந்தித்து கொண்ட டிடிவி தினகரன், அண்ணாமலை
கரூரில் நடைபெற்ற அமமுக மாவட்ட செயலாளரின் இல்ல திருமண விழாவில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் ஒருவரையொருவர் சந்தித்து நலம் விசாரித்து கொண்டனர். வெண்ணைமலை அருகே தனியார் கலையரங்கில் அமமுக மாவட்ட செயலாளர் தங்கவேலின் இல்ல திருமணவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு தங்கவேலின் உறவுக்காரரான அண்ணாமலை வந்திருந்தார். அதே சமயம் டிடிவி தினகரனும் வந்த நிலையில், இருவரும் சந்தித்து உரையாடினர். இந்த திருமணவிழாவுக்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அண்ணாமலையை மட்டும் சந்தித்து பேசினார்.
Next Story
