Annamalai | கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அண்ணாமலை செய்த செயல்
Annamalai | கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அண்ணாமலை செய்த செயல்
மக்களின் அன்பைப் பெறுவதே நமது நோக்கம் என அண்ணாமலை பேச்சு தூத்துக்குடியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட வீ த லீடர் அமைப்பு நிறுவனர் அண்ணாமலை, மக்களின் அன்பைப் பெறுவதே நமது நோக்கம் எனப் பேசியுள்ளார். திரேஸ்புரம் பகுதியில் வீ த லீடர் அமைப்பு சார்பில் நடைபெற்ற கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் அதன் நிறுவனர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது திடீரெனப் பெய்த பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் அவர் மக்களிடையே உரையாற்றினார். அப்போது, கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை 175 கிலோமீட்டர் கடற்கரையை அடுத்த 365 நாட்களுக்குள் முழுமையாகத் தூய்மைப்படுத்த உள்ளதாக தெரிவித்த அவர், மக்களின் அன்பைப் பெறுவதே தமது இலக்கு என உறுதியளித்தார்.
