Annamalai | பதிலடியை ஆரம்பித்த அண்ணாமலை

பதிலடியை ஆரம்பித்த அண்ணாமலை

#annamalai #bjp முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இந்தி திணிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமத்திய குற்றச்சாட்டிற்கு, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆறாம் வகுப்பு முதல் மும்மொழிக் கல்வி கட்டாயமாக்கப்படும் நிலையில், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்பதே விதிமுறை எனக் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளுமே இதில் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தித் திணிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com