`GetoutModi’ என சொல்வார்கள் என நினைத்த அண்ணாமலைக்கு எதிர்பாரா ட்விஸ்ட் வைத்த திமுக
மும்மொழி கொள்கை உள்ளிட்ட விவகாரங்களில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர், சமூக வலைதளத்தில் ஹேஷ்டேக்கை மாறி மாறி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கல்வித்துறைக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், கெட் அவுட் மோடி (GetoutModi) என்ற ஹேஷ்டேக்கை எக்ஸ் வலைதள பக்கத்தில் தி.மு.க.வினர் ட்ரெண்ட் செய்தனர். இதற்கு எதிராக, கெட் அவுட் ஸ்டாலின் (GetoutStalin) என்ற ஹேஷ்டேக்கை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவிட்டார். இந்நிலையில், கெட் அவுட் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கிற்கு எதிராக, தமிழ் வாழ்க என்ற ஹேஷ்டேக்கை தி.மு.க.வினர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Next Story