``ரூ.44 ஆயிரம் கோடி’’ - அண்ணாமலை பரபரப்பு அறிக்கை
தங்களது கட்சிக்காரர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளின் வளர்சிக்காக திமுக அரசு உழைத்துக் கொண்டிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் வரிப்பணத்தில் ஆண்டுக்கு சுமார் 44,000 கோடி ரூபாயை பள்ளிக்கல்வித் துறைக்குச் செலவழித்துவிட்டு, தங்களது சொந்தக் கட்சிக்காரர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காக திமுக அரசு உழைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தித் திணிப்பு என்று கூறி மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுகவினர் பொய் பிரசாரம் செய்வதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story