``அண்ணாமலை சொல்ட்டு போனாரு..ஆனா இதுவர தொடர்பு கொள்ளவே இல்லை’’ - பரபரப்பு புகார்

x

டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக டெல்லிக்கு அழைத்துச் செல்வோரில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் இடம்பெறவில்லை என, விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டினர். டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக, மேலூர் வட்டத்தை சேர்ந்த விவசாயிகள் குழு, மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டு, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திப்பதாக தகவல் வெளியானது. இதற்காக விவசாயிகள் சங்கத்தினர் விமான நிலையம் வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அரிட்டாபட்டியை சேர்ந்த கருப்பணன் என்பவர், பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை, ஒருபோக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஐந்து விவசாயிகளை தேர்ந்தெடுத்து அனுப்புமாறு கூறியதாகவும், ஆனால் இதுவரை தங்களை தொடர்புகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்