``இதான் நிலைப்பாடு’’ - தடாலடியாக அறிவித்த அண்ணாமலை
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் யார் உண்மையைக் கூறுகின்றனர் என்பதை தமிழக மக்கள் நன்றாக புரிந்து கொள்வர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், நவோதயா உள்ளிட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் நீட் உள்ளிட்ட தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவதாக கூறிய அவர், மும்மொழிக் கொள்கை குறித்து பேசக் கூடியவர்கள் தங்கள் குடும்பத்து குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள் என்பதை தெரிவித்துவிட்டு பேச வேண்டும் எனவும் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக இருந்தால் தமிழக பாஜக மும்மொழிக் கொள்கையை வலியுறுத்திதான் செயல்படும் எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Next Story