"இது என்ன நியாயம்?" - அண்ணாமலை கேள்வி

x

அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா? என, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்? என்றும் வினவியுள்ளார். உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.... இன்னும், 1960களில் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்