``சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது..'' - அண்ணாமலை பரபரப்பு பதிவு | Annamalai
பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதி என்ற திமுகவின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியது குறித்து கருத்து பதிவிட்ட அவர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மும்மொழி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு, முதலமைச்சர் பதில் அளிக்க மறுத்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் திமுகவினருக்கு, இந்தி எது ஆங்கிலம் எது என்பதை, முதல்வரின் அறிக்கை விளக்க மறந்து போனது வருத்தம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
Next Story