கிளம்பும் போது வந்த அண்ணாமலை - கை பிடித்து அழைத்து சென்ற அமித்ஷா
முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் இல்ல திருமண விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முதல்வர் ஸ்டாலின், தனது துணைவியாருடன் வருகை தந்தார். இதேபோல் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், ஆளுநர் ஆர்.என்.ரவி, சபாநாயகர் ஓம் பிர்லா, முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு மாநில ஆளுநர்கள் பங்கேற்றனர். மேலும், நடிகர்கள் விஷால், ஜீவா, அர்ஜுன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
Next Story