Annamalai | ADMK | ஆப்ஷனில் 3 தொகுதிகள்.. அண்ணாமலை எங்கே போட்டி? - கோவையில் அதிமுக வைத்த செக்
Annamalai | ADMK | ஆப்ஷனில் 3 தொகுதிகள்.. அண்ணாமலை எங்கே போட்டி? - கோவையில் அதிமுக வைத்த செக்
எந்த தொகுதியில் போட்டியிடலாம் என அண்ணாமலை தீவிர ஆலோசனை கோவையில் எந்த தொகுதியில் போட்டியிடலாம் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், பல்லடம் ஆகிய மூன்று தொகுதிகளை அவர் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், இவற்றில் எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என தனது ஆதரவாளர்களிடம் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கோவையில் பாஜகவுக்கு ஒரே ஒரு தொகுதியை மட்டுமே அதிமுக ஒதுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோவையில் உள்ள தொகுதியை பெற பாஜகவினரிடையே கடும் போட்டி நிலவும் என்றும் கூறப்படுகிறது.
