அன்புமணி சொன்ன வார்த்தையால் வேதனைப்பட்ட GK மணி
ராமதாஸ் கண்ணீர் வடிப்பது தனக்கு வேதனை அளிப்பதாக உள்ளது என பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், தன்னை அன்புமணி தீய சக்தி என கூறுவது வேதனை தருவதாக தெரிவித்துள்ளார். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர் வடிப்பது தனக்கு வேதனை தருவதாகவும், அவர் கண்கலங்காமல் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரும் நிலையில், பாமக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
