முதலமைச்சரை சந்தித்தது ஏன்..? - அன்புமணி ராமதாஸ் விளக்கம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். சென்னை தலைமைச்செயலகம் வந்த அன்புமணிக்கு, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கோகுல இந்திரா பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். பின்னர் நடந்த சந்திப்பில், தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்ட மனுவை முதலமைச்சரிடம் அன்புமணி வழங்கினார். மேலும், காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com