மகனுக்கு தன் கையால் விருது வழங்கி அமைச்சர் அன்பில் மகேஷ்.. நெகிழ்ச்சி சம்பவம் | Anbil Mahesh

மகனுக்கு தன் கையால் விருது வழங்கி அமைச்சர் அன்பில் மகேஷ்.. நெகிழ்ச்சி சம்பவம் | Anbil Mahesh
Published on

பள்ளி மாணவர்கள், தொழில் முனைவோர்களாக மாறுவதற்கான சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு சான்றிதழ் வழங்கக்கூடிய நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

அமைச்சரின் கைகளால் சான்றிதழ்களை பெற்ற மாணவர்களில், அவரது இளைய மகன் கவினும் ஒருவர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இன்டர்நேஷனல் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் கவின், தனது தந்தை கையால் சான்றிதழை பெற்றார். மகனின் தோளை தட்டி அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து நமது தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த கவின், மொழிப்பாடமாக தான் பிரஞ்சு எடுத்துள்ளதாகவும், தன் தந்தை ஒரு அமைச்சராக சிறப்பாக செயல்படுவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்...

X

Thanthi TV
www.thanthitv.com