"பறித்துக் கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல" - அமைச்சர் அன்பில் மகேஷ் போட்ட பதிவு
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு இன்னொரு மொழிப் போரை தூண்டப் பார்ப்பதாக, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம்சாட்டி உள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்திற்கு தேவையான 2 ஆயிரத்து 152 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின், மும்மொழி எதிர்ப்பு தொடர்பான ஆடியோவை, அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல.. இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல... எம்மிடமிருந்து பறித்துக் கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல... என்ற அண்ணா கருத்தையும் பதிவிட்டுள்ளார்.
Next Story