Nallakannu Death | CPI | முடிவுக்கு வந்த சகாப்தம் - அரைக்கம்பத்தில் பறக்கும் கட்சிக்கொடி
அரைக்கம்பத்தில் பறக்கும் கட்சிக்கொடி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மறைவை ஒட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. மறைந்த நல்லகண்ணுவின் உடல், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக, தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கட்சிக் கொடிக் கம்பத்தில், கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
