ADMK | மேடையிலேயே காலில் விழுந்து பதவியை ராஜினாமா செய்து கண்ணீர் விட்ட அதிமுக புள்ளி

மேடையிலேயே காலில் விழுந்து பதவியை ராஜினாமா செய்து கண்ணீர் விட்ட அதிமுக புள்ளி

மேடையிலேயே காலில் விழுந்து பதவியை ராஜினாமா செய்து கண்ணீர் விட்ட அதிமுக புள்ளி #admk #kallakurichiadmk மேடையில் காலில் விழுந்து பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி கள்ளக்குறிச்சியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்ட மேடையிலேயே மாவட்ட செயலாளரிடம், ராஜினாமா கடிதத்தை வழங்கிய நகர செயலாளரால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது கள்ளக்குறிச்சி அதிமுக நகர செயலாளர் பாபு, "தான் நகர செயலாளராக பணியாற்ற விரும்பவில்லை, மிகுந்த மன வருத்தத்தில் உள்ளேன்" என கண்ணீர் மல்க மேடையில் விழுந்து கையெடுத்து கும்பிட்டு, பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை அளித்து விட்டு வெளியேறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

X

Thanthi TV
www.thanthitv.com