அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகிகள்

அமைச்சர் கடம்பூர். ராஜூ முன்னிலையில் கழுகுமலையை சேர்ந்த அமமுக நிர்வாகிகள், அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகிகள்
Published on
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் அமைச்சர் கடம்பூர். ராஜூ முன்னிலையில் கழுகுமலையை சேர்ந்த அமமுக நிர்வாகிகள், அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வைப்பாற்றில் விரைவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார். இதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் வைப்பாற்றில் 65 எம்.எல்.டி அளவிற்கு குடிநீரைப் பெறுவதற்கு உண்டான திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது, தண்ணீர் பிரச்சினை தீரும் என்றும் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com