"மோடியின் பலத்தால் அபிநந்தன் தாயகம் திரும்பினார்" - அமித் ஷா பெருமிதம்

விங் கமாண்டர் அபிநந்தன் தாயகம் திரும்பியதற்கு காரணம், பிரதமர் மோடியின் பலம் என பா.ஜ.க, தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
"மோடியின் பலத்தால் அபிநந்தன் தாயகம் திரும்பினார்" - அமித் ஷா பெருமிதம்
Published on
விங் கமாண்டர் அபிநந்தன் தாயகம் திரும்பியதற்கு காரணம், பிரதமர் மோடியின் பலம் என பா.ஜ.க, தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர், பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டு அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கிய நம் வீரர், அடுத்த 24 மணி நேரத்தில் தாயகம் திரும்பியதாக குறிப்பிட்டார். தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்ததற்கு மம்தா ஆதாரம் கேட்கிறார், அரசியல் ஆக்கப்படுவதாக ராகுல்காந்தி கூறுகிறார், விசாரணை நடத்த வேண்டும் என்கிறார் அகிலேஷ் என அமித்ஷா விமர்சித்தார். இத்தகைய கருத்துகளை கேட்டு பாகிஸ்தான் சிரிப்பதை பார்க்கும்போது அசிங்கமாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com