அமெரிக்காவில் கால் பதித்தார் பிரதமர் மோடி | america | Pm Modi

x

பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை சென்றடைந்தார். வெள்ளை மாளிகை எதிரே உள்ள பிளேர் ஹவுஸ் விருந்தினர் மாளிகைக்கு வந்த அவரை, இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

அமெரிக்காவில் 2 நாள் அரசு முறை பயணமாக தங்கும் அவர், அந்நாட்டு அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பை எதிர்நோக்கி இருப்பதாகவும், மக்களின் வளமான எதிர்காலத்திற்காக, அமெரிக்காவுடன் இணைந்து தாம் பணியாற்ற தயாராக இருப்பதாகவும் மோடி தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்