திடீரென கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ
ராமநாதபுரம் மாவட்டம் வேந்தோணி கிராமத்தில், நம்மவர் படிப்பகம் திறக்கப்பட்டது தொடர்பாக, நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இளைஞர்கள் வேலைக்கு செல்லும்போது பட்டம் இருந்தாலும், வேலைக்கு தகுதியான பட்டம் இல்லை என்று சொல்லி விடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் சொல்லிக் கொடுக்கும் கல்வி மட்டுமல்லாது, திறன் மேம்பாட்டையும் இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.
Next Story