அம்பேத்கர் பிறந்தநாள் விழா-திமுக vs பாஜக இடையே தள்ளுமுள்ளு
அம்பேத்கர் சிலைக்கு சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன் உள்ளிட்ட திமுகவினர், மரியாதை செலுத்த வந்தனர். அதே நேரத்தில் வந்த பாஜக மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமையிலான பாஜகவினரும் வந்திருந்தனர். தொடர்ந்து, 2 தரப்பில் அம்பேத்கரின் சிலைக்கு பாஜகவினர், முதலில் மாலை அணிவித்தற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், 2 தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு, போலீசார் 2 தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
Next Story