"7.18 தொகுதி என்ற வரையறை விகிதம் நீடிக்க வேண்டும்" - அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
தமிழ்நாட்டில் உள்ள 7.18 என்ற தொகுதி வரையறை விகிதம் கண்டிப்பாக நீடிக்க வேண்டும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். தமிழகத்தில், தொகுதி மறுவரை தொடர்பான கூட்டம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் 7.18 என்ற தொகுதி வரையறை விகிதம் கண்டிப்பாக நீடிக்க வேண்டும் என்றும், அரசியல் அமைப்பு சட்டத்திலும் அதற்குறிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் எந்த வித அரசியலோ, உள்நோக்கமோ இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்
Next Story