ஆளுநர் விவகாரம் - முதல்வர் போட்ட பதிவு
தமிழக ஆளுநர் வழக்கு மற்றும் பிற முன்னுதாரணங்களில் உச்சநீதிமன்றத்தால் ஏற்கனவே தீர்க்கப்பட்ட அரசியலமைப்பு நிலைப்பாட்டைத் தகர்த்தெறிய முயற்சிக்கும் மத்திய அரசின் இந்த முயற்சியை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
மக்களின் ஆணையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் பாஜகவின் கட்டளைப்படி தமிழக ஆளுநர் செயல்பட்டார் என்பதை இந்த முயற்சி தெளிவாக அம்பலப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.இது, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, மத்திய அரசின் முகவர்களாகச் செயல்படும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து பலவீனப்படுத்தும் ஒரு தீவிர முயற்சியே தவிர வேறில்லை என்று தெரிவித்துள்ள முதல்வர், சட்டத்தின் மகத்துவத்திற்கும், அரசியலமைப்பின் இறுதி விளக்கமளிக்கும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கும் நேரடி சவாலாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story
