பழமையான அணைகளை கண்காணித்து சீரமைக்க வேண்டும் - திருநாவுக்கரசர்

திருச்சி முக்கொம்பு அணையில் 9 மதகுகள் உடைந்த நிலையில், மற்ற அணைகளை கண்காணித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
பழமையான அணைகளை கண்காணித்து சீரமைக்க வேண்டும் - திருநாவுக்கரசர்
Published on
திருச்சி முக்கொம்பு அணையில் 9 மதகுகள் உடைந்த நிலையில், மற்ற அணைகளை கண்காணித்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தலைமை பொறியாளர்கள், வல்லுநர்கள் உள்ளிட்ட குழுவினை அமைத்து தமிழகத்திலுள்ள அனைத்து அணைகளையும் பார்வையிட்டு, பழுது இருந்தால் அவற்றை பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். எதிர்காலத்தில் இதுபோல் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com