Aishwarya Rai | PM Modi | பிரதமர் மோடியின் காலை தொட்டு ஆசிபெற்ற ஐஸ்வர்யா ராய் - வைரலாகும் வீடியோ
முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் நடைபெற்ற சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில், நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்று உரையாற்றினார். ஒரே சாதி தான் இருக்கிறது அது மனிதகுலம், ஒரே மதம் தான் உள்ளது அது தான் அன்பின் மதம், இதயத்தின் மொழிதான் நம் ஒரே ஒரு மொழி. ஒரே கடவுள் அவர் எங்கும் நிறைந்திருக்கிறார் என்று ஐஸ்வர்யா ராய் கூறினார். பின்னர் உரையை முடித்ததும், மேடையில் இருந்த பிரதமர் மோடியின் அருகே சென்று அவரது காலை தொட்டு ஐஸ்வர்யா ராய் ஆசிபெற்றார்.
Next Story
