"ஒரு எம்.பியாகிய எனக்கே இந்த நிலையா?" - தமிழச்சி தங்கபாண்டியனிடம் கேட்கப்பட்ட மன்னிப்பு

x

"ஒரு எம்.பியாகிய எனக்கே இந்த நிலையா?" - தமிழச்சி தங்கபாண்டியனிடம் கேட்கப்பட்ட மன்னிப்பு

ஏர் இந்தியா நிறுவனம் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனிடம் மன்னிப்பு கோரியது... கடந்த வியாழக்கிழமை டெல்லியில் இருந்து சென்னை செல்வதற்காக ஏர் இந்தியா விமானத்தில் “பிசினஸ் கிளாஸ்“ வகுப்பில் தமிழச்சி தங்கபாண்டியன் டிக்கெட் புக் செய்திருந்த நிலையில், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி, அது சாதாரண வகுப்பிற்கு மாற்றப்பட்டது. “ஒரு எம்.பியாகிய எனக்கே இந்த நிலையா?“ என்று மத்திய விமானத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவிடம் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் மன்னிப்பு கோரி உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்