ADMK | TNPolitics | அதிமுக கூட்டத்தில் இருந்து சபதமிட்டு வெளியேறிய முக்கிய புள்ளி

ADMK | TNPolitics | அதிமுக கூட்டத்தில் இருந்து சபதமிட்டு வெளியேறிய முக்கிய புள்ளி

ADMK | TNPolitics | அதிமுக கூட்டத்தில் இருந்து சபதமிட்டு வெளியேறிய முக்கிய புள்ளி முன்னாள் அமைச்சரும், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏவுமான கே.சி. வீரமணி, தன்னை சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக கூறப்படும் நிர்வாகி பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை அதிமுக கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்று அறிவித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். வாணியம்பாடியில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில், அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.ஆம்பூர் தொகுதியில் போட்டியிட்ட வெங்கடேசன் தேர்தல் தோல்வி விரக்தியால் அவதூறு பரப்பியதாக குற்றம்சாட்டிய அவர், தலைமை அறிவுறுத்தியிருந்தும் சம்பந்தப்பட்ட நிர்வாகி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்தார். வீரமணியுடன் அவரது ஆதரவாளர்களும் வெளியேறியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது

X

Thanthi TV
www.thanthitv.com