AIADMK | SP Velumani | TN Politics | அரசுக்கு எஸ்.பி.வேலுமணி முக்கிய கோரிக்கை
அரசுக்கு எஸ்.பி.வேலுமணி முக்கிய கோரிக்கை
AIADMK | SP Velumani | TN Politics | அரசுக்கு எஸ்.பி.வேலுமணி முக்கிய கோரிக்கை #AIADMK #SPVelumani #TNPolitics கோவை, மதுரை மாநகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஆட்சியில் கோவைக்கு 10 ஆயிரத்து 740 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரைக்கு 11 ஆயிரத்து 360 கோடியிலும் திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால் மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவு எனக் கூறி திட்டங்களை மத்திய அரசு நிராகரித்தது. குறைந்த மக்கள் தொகை கொண்ட வடமாநில நகரங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள வேலுமணி, கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
