"நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்" - தொண்டர்களிடம் முதலமைச்சர் பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என அதிமுகவினரிடம் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்" - தொண்டர்களிடம் முதலமைச்சர் பேச்சு
Published on
கன்னியாகுமரியில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்றுள்ள முதலமைச்சர் எடப்படி பழனிசாமிக்கு நெல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பாளையங்கோட்டை கேடிசி நகரில் நடைபெற்ற வரவேற்பை ஏற்றுக் கொண்ட அவர், தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட முதல்வராக முடியும் என குறிப்பிட்ட முதலமைச்சர், திமுக வாரிசு அரசியல் கட்சி என குற்றஞ்சாட்டினார். ஜெயலலிதா இருந்தபோது வெற்றி பெற்றது போலவே, வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் தொண்டர்களை கேட்டுக் கொண்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com