திமுக அரசை கண்டித்து அதிமுக போராட்டம்.. கூட்டத்தில் சற்றும் எதிர்பாரா காட்சி..
பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யத் தவறிய ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மின்வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது மேடை முன்பு தமிழக அமைச்சர் பொன்முடியின் உருவப்படத்திற்கு பெண்கள் செருப்பு மாலை அணிவித்து உருவ படத்தை செருப்பால் அடித்தனர். தொடர்ந்து பெண்களை அவதூறாக பேசி வரும் பொன்முடியை கண்டித்தும் அவர் மீது உரிய நடவடிக்கையை திமுக அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது.
Next Story