விஜயகாந்துடன், அமைச்சர்கள் திடீர் சந்திப்பு : இடைத்தேர்தலில் ஆதரவு தருமாறு வேண்டுகோள்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை, அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சந்தித்தனர்.
விஜயகாந்துடன், அமைச்சர்கள் திடீர் சந்திப்பு : இடைத்தேர்தலில் ஆதரவு தருமாறு வேண்டுகோள்
Published on
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை, அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சந்தித்தனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு தருமாறு, விஜயகாந்திடம் அமைச்சர்கள் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com