அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்படுமா...?

தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை திங்கள்கிழமை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்படுமா...?
Published on
அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால் கூட்டம் முழுமையாக நடைபெறாததால், வருகின்ற திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு மீண்டும் கூட்டப்படும் என அதிமுக தலைமை தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது வருகின்ற 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்தது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கூட்டம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், கூட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் இது தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிக்கை வாயிலாக தெரிவிக்கப்படும் எனவும் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com